கூட்டணி கட்சியினரை ஏமாற்றம் திமுக நிர்வாகிகள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 1 July 2022

கூட்டணி கட்சியினரை ஏமாற்றம் திமுக நிர்வாகிகள்.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது.நகர மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த சுமிதா சிவக்குமார் அவர்கள் பதவியேற்றார்.இந்நிலையில் நகரமன்ற துணைத் தலைவருக்கான போட்டியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பிரேம்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென்று திமுகவைச் சேர்ந்த 26 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ராஜா முகமது என்பவரை திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மறைமுக தேர்தலில் வாக்களித்து துணைத் தலைவராக தேர்வு செய்தனர்.இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்,சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகை,நகராட்சி அலுவலக முற்றியன பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.


இது சம்பந்தமாக திமுக தலைமைக்கு தகவல் தெரிவிக்கவே அப்போதைய நகர பொறுப்பாளராக பணியாற்றி வந்த எஸ் பி முரளி என்பவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலின் அவர்கள் நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.மேலும் இது சம்பந்தமாக கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர்  வெற்றி பெற்ற இடங்களில் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூட்டணி தர்மத்தின் படி கூட்டணி கட்சி நேருக்கு இடங்களை விட்டுத் தர வேண்டும் என அறிவுரை கூறினார்.


இது சம்பந்தமாக திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த சூழலில்,ராஜா முகமது என்பவரை பதவியை ராஜினாமா செய்யவலியுறுத்தி வந்தனர்.திடீரென ராஜா முகமதுருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இது சம்பந்தமாக அவர் பத்திரிக்கை மீடியா வினரை அழைத்து பேட்டி கொடுக்கையில் திமுக நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து மீண்டும் மியூசிக் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ராஜா முகமது என்பவர் நகராட்சியில் தனது பெயரில் இரண்டு கடைகளை ஏலத்தில் எடுத்ததும் அதனை தேர்தல் பிரமாண பத்திரத்தில் மறைத்ததாக கூறி அவரை தகுதி நீக்க செய்ய வேண்டும் என கோரி பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்துபெரியகுளம் நகராட்சி 26 ஆவது வார்டு காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துஅந்த காலி இடத்திற்கு மறு தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.


கடந்த 20தேதி முதல் 27 ஆம் தேதி வரை காலியிடத்திற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என நான்கு பேர் வேட்பு மனுக்கள்ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறுகின்ற சூழலில்,மேற்படி ராஜா முகமது தன்னை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும் 26 வது வார்டு மறு தேர்தலுக்கான வாக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரி தேனி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


விசாரணையில் பெரியகுளம் நகராட்சி 26 வது வார்டு இடைத்தேர்தலில் எட்டு வார காலங்களுக்கு நடத்த தடை விதித்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதனால் திமுக மற்றும் விசிக -வினருடையே சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad