தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்துவந்த இரண்டுபேர்கள் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 July 2022

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்துவந்த இரண்டுபேர்கள் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைக்கிராமமான வருஷநாடு அருகே உள்ள காந்திகிராமத்தைச் சேர்ந்த 57 வயதான பழனிச்சாமி என்பவரும், மற்றொரு மேற்குத்தொடர்ச்சி மலைககிராமமான தண்டியன்குளத்தை  சேர்ந்த பெரியசொக்கர் என்பவரது மகன் 36 வயது பெருமாள் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.  


இது சம்பந்தமாக இவர்கள் இருவரின் மீதும் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இவ்வழக்குகளில்  கைதுசெய்யப்பட்டு தற்போது இவர்கள் இருவரும் மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பழனிச்சாமி பெருமாள் ஆகிய இருவரையும் குண்டர்தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். 


இதையடுத்து இந்த உத்தரவு நகல்கள் மதுரை மத்தியச்சிறையில் உள்ள இருவரிடம் வழங்கப்பட்டு குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது  ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad