கீழவடகரை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 27 July 2022

கீழவடகரை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது இதில் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது.


மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்துக் கொடுக்கும் படியும் பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து கொடுத்தால் கிலோ 8 ரூபாய்க்கு நாங்களே பெற்றுக் கொள்கிறோம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்ததன் படி பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது இல்லங்களில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்டால் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி ஊராட்சி மூலம் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.


ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், துணைத் தலைவர் ராஜசேகர், கிளர்க் ஜெயபாண்டி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad