எம்.எல்.ஏ சரவணகுமார் முன்னிலையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 July 2022

எம்.எல்.ஏ சரவணகுமார் முன்னிலையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  தாமரைக் குளம்  பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று பேரூராட்சி பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்திற்கு  பேரூராட்சித் தலைவர் பால்பாண்டி, துணை தலைவர் மலர்கொடி சேதுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார்  முன்னிலையில் தேனி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜாராம் ,  செயல் அலுவலர் ஆளவந்தான்  தாமரைக் குளம்  பேரூராட்சி பணி நியமனக் குழு தலைவர் பாலாமணி பழனி முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட  பணிகள் குறித்து  கேட்டறிந்தனர். 


மேலும் தாமரைக் குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளான   சாலை வசதி, குடிநீர் முறையாக கிடைக்க வழிவகை செய்தல், வீட்டு வரி, வீடு கட்டுவதற்கான திட்ட அலுவலக போன்ற  பணிகளை செயல் அலுவலர் ஆளவந்தான் சரிவர செய்ய வில்லை அதனால் பொதுமக்கள் அவதி படுவதாகவும் வார்டு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ்.சரவணகுமார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜாராமிடம் புகார் தெரிவித்தனர்.


மேலும் தாங்கள்  பகுதியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிறைவேற்றித் தருமாறு  கோரிக்கை வைத்தனர். இதில் திமுக நிர்வாகிகள் அப்பாஸ் மைதீன், முகமது இலியாஸ்,  சாமி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad