தனியார் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் பல்வேறு வகையான பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகின்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 July 2022

தனியார் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் பல்வேறு வகையான பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகின்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகிலும், பவள தியேட்டர் அருகிலும் தனியாரால் இரண்டு மன மகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. கடை திறந்துள்ள பகுதி திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை ஆகும், மேலும் கோவில்கள் பள்ளிவாசல்கள் சர்ச்சுகள்,கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள்,பேருந்து நிறுத்தம் ஆட்டோ நிலையம் உள்ளிட்ட அன்றாடம் மக்கள் வந்து செல்லும் பிரதான சாலை என்பதால் எப்பொழுதும் கூட்டம் மிகுந்தே காணப்படும். மக்கள் அதிகப்படியாக கூடும் இடத்தில் தனியார் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் பல்வேறு வகையான பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகின்றது.


ஆகவே மேற்படி தேசிய நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டுள்ள தனியார் மதுபான கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் மதன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்களிடம் மனுவாக அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad