விளையாட்டு மைதானமா அல்லது கால்நடை மருத்துவமனையா? - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 July 2022

விளையாட்டு மைதானமா அல்லது கால்நடை மருத்துவமனையா?

விளையாட்டு மைதானமா அல்லது கால்நடை மருத்துவமனையா? என்று கேட்கும் அளவிற்கு பகல் நேரங்களில் மாறிப்போயுள்ள பெரியகுளம் நியூ கிரவுண்ட் இதுவாவது பரவாயில்லை. கால்நடை மேய்ப்பவர்கள் தங்கள் கால்நடைகள் வெளியில் எங்கும் போய் விடக்கூடாது என்பதற்காக கிரவுண்டுக்குள் நுழையும் சிறிய பாதையையும் அடைத்து வைத்துக் கொள்கின்றனர் பகல் நேரங்களில் இவர்களுக்கு இதைச் செய்யும் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை?


யாருக்கும் அடங்காத குடிமகன்கள் சிலபேர் பகல் நேரத்திலேயே பார்சல் மற்றும் தின்பண்டங்களை வாங்கி வந்து எத்தனை பேர் இருந்தாலும் முகம் சுளிக்கும் வகையில் மது அருந்துகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது.ஆங்காங்கே நிரோத் பாக்கெட்டுகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் உள்ளன. மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பள்ளி மைதானத்தை சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருவகின்றனர்.


ஆகவேநியூ கிரவுண்டை நவீனப்படுத்தி சிசிடிவி கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தி ஒரு முழுமையான விளையாட்டு மைதானமாக மாற்ற அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் தினமும் காலை மாலை இரண்டு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad