அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மன நோயாளி தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 July 2022

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மன நோயாளி தூக்கிட்டு தற்கொலை.

பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மன நோயாளி தூக்கிட்டு தற்கொலை :

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இ சி ஆர் சி எனப்படும் மன நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பலன் பெற்று வரும் போடி பகுதியைச் சார்ந்த கண்ணன் என்கிற மன நோயாளி இன்று 08.07.22 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத இந்த சிகிச்சை பிரிவில் தற்கொலை நடந்துள்ள சம்பவம் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மருத்துவர் பற்றாக்குறையை சுட்டிக் காட்டுவதாகவும். 


பணிமருத்துவர்கள் பணி நேரங்களில் இங்கு பணிபுரிவதில்லை என்பதை உணர்த்துவதாக உள்ளது மேலும் இங்கு இவர் தூக்கிட்டு தற்கொலை செய்யும் பொழுது மருத்துவர் பணியில் இருப்பதாக பொய்யாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 


தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மன நோயாளி கண்ணனின் உடல்  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad