பாலிதீன் பைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 2 July 2022

பாலிதீன் பைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பாலிதீன் பயன்படுத்த விற்க அரசு தடைசெய்துள்ள நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் மொத்த வியாபாரமும் சில்லறை வியாபாரமும் படுஜோராக நடைபெற்று வருகிறது.


இதனால் பெரிய உலகின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உள்ள வராக நதியில் ஆங்காங்கே பாலிதீன் கவர்கள் பிளாஸ்டிக் பைகள் கொட்டப்பட்டு வருவதால் நீர் மாசடைவதோடு சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அதனை மாடுகள் மற்றும் விலங்குகள் உண்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.


மொத்தமாக குப்பை கிடங்குகளில் கொட்டி சமூக விரோதிகள் சில தீ வைப்பதால் காற்று மாசு அடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மேலும் பெரியகுளம் பகுதிகளில் நடைபெறு ஆய்வு என்பது வெறும் கண் துடிப்பாகவே இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மொத்த வியாபாரிகளை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும்-நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் ஆகவே மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து பெரியகுளம் பகுதிகளில் ஆய்வு செய்து பல்வேறு குடோன்களில் மொத்த வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ள பாலிதீன் பைகளை கைப்பற்றி அதன் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad