துப்புரவு பணியாளரை பணி அமர்த்தினால் பேரூராட்சி தலைவர் உட்பட 10 வார்டு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவிப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 August 2022

துப்புரவு பணியாளரை பணி அமர்த்தினால் பேரூராட்சி தலைவர் உட்பட 10 வார்டு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் வேலை பார்த்து வரும் துப்புரவு பணியாளர்கள் கண்ணன் முருகன் ஆகிய இரண்டு பேர் தங்களது பணிகளை பணி செய்யாமலும், பேரூராட்சிக்கு அலுவலத்தின் முன்பாக  கொடிக்கம்பம்  வைத்ததை அப்புறப்படுத்திய பின்னரும் சக பணியாளர்களையும் பணி செய்ய விடாமல் தாமும் பணி செய்யாமல் இருந்து வந்த இரண்டு பேரையும் பேரூராட்சி மன்ற கூட்டத்தின் வாயிலாக 2பேரையும் மாற்றம் செய்ய சிறப்பு தீர்மானம் ஏற்றி கடந்த ஜூலை மாதம் துப்புரவு பணியாளர்கள் கண்ணன்,  முருகன் ஆகியோர் வேறு பேரூராட்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். 


அதன் பின்னர் தற்போது கெங்குவார்பட்டி பேரூராட்சியில் பணியாற்ற அவர்கள் திரும்ப வரப்போவதாக தகவலின் அடிப்படையில் கெங்குவார்பட்டியில் பேரூராட்சி  அலுவலகத்தின் முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்த கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி செளந்தர்ராஜன் மற்றும் 10  கவுன்சிலர்கள் ஆகியோர் கூட்டாக அவர்களின் பணி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கு பணி அமர்த்தினால் பேரூராட்சி தலைவர் உட்பட 10 கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என ஏக மனதாக முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad