பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியை விநியோகம் செய்த நகர மன்ற உறுப்பினர் ஓ சண்முகசுந்தரம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 August 2022

பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியை விநியோகம் செய்த நகர மன்ற உறுப்பினர் ஓ சண்முகசுந்தரம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தம்பியும், அ இஅதிமுக பெரியகுளம் நகர்மன்ற குழு தலைவரும், பெரியகுளம் நகராட்சி 24 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஓ. சண்முகசுந்தரம் அவர்கள் தமது வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களது வேண்டுகோளின் படி பொதுமக்கள் தங்களது இல்லங்கள் தோறும் தேசியக்கொடியனை ஏற்ற வேண்டும் என்ற ஆணைக்கிணங்கவும் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, தமது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, தேசியக் கொடியினை இலவசமாக வழங்கி தங்களது இல்லங்களில் ஏற்றிட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தும், தேசிய கொடியினை எவ்வாறு ஏற்ற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். 


நகர்மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரம் அவர்களது இச்செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினையும் பாராட்டையும் பெற்றது. இந்நிகழ்வின் போது எம்ஜிஆர் நகர்மன்றச் செயலாளர் வீ டி எஸ் ராஜவேலு, ரெங்கராஜ் உட்பட வார்டு கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad