கஞ்சா விற்ற 4 பேர் கைது, 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 August 2022

கஞ்சா விற்ற 4 பேர் கைது, 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு.

கடமலைக்குண்டு போலீசார் கடந்த ஜூலை 19ம் தேதி  பாலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலூத்து சேர்மலையாண்டி கோவில் அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பாலூத்து கிராமத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 55) அவருடைய மகள் சத்யா (39), மகன் ஜெயசூர்யா (28) மற்றும் ஆட்டோ டிரைவர் சுந்தரபாண்டி (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை  பறிமுதல் செய்தனர்.  


இதில் முக்கிய குற்றவாளிகளான ஜெயசூர்யா, சுந்தரபாண்டி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஜெயசூர்யா, சுந்தரபாண்டி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று உத்தரவிட்டார்.  


இதனை அடுத்து தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad