கடமலை - மயிலை ஒன்றியத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 August 2022

கடமலை - மயிலை ஒன்றியத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.


கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., திருப்பதி முத்து கொடியேற்றினார். ஏ. பி.டி.ஓ., திருப்பதி வாசகம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆயுதவல்லி மணிமாறன், மச்சக்காளை ,சித்ரா சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கடமலைக்குண்டு ஹயக்ரீவர  மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளியின் தாளாளர் குமரேசன் கொடியேற்றினார், பள்ளி முதல்வர் பார்வதி உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியேற்றினார். இதில் சார்பு ஆய்வாளர்கள்  மற்றும் போலீசார் கலந்து கொண்டனர், கடமலைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில்  தலைவர் சந்திரா தங்கம் தலைமை வகித்து கொடியேற்றினர். துணைத் தலைவர் பிரியா தனபாலன், ஊராட்சி செயலாளர் துரைப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


துரைசாமிபுரம்  ஊராட்சி அலுவலகத்தில்  தலைவர் மாயா கிருஷ்ணன் தலைமை வகித்து கொடியேற்றினார். துணைத் தலைவர் கணேசன், ஊராட்சி செயலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர், பாலூத்து ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் ஜெயபிரியா உதயகுமார் தலைமை வகித்து கொடியேற்றினார். துணை தலைவர் பாலு, ஊராட்சி செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மயிலாடும்பாறை  ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பார்வதி அன்பில் சுந்தர பாரதம் தலைமை வகித்து கொடியேற்றினார். துணைத் தலைவர் நாகராஜன், ஊராட்சி செயலாளர் ஆங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர், வருஷநாடு ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் மணிமுத்து கொடியேற்றி னார் . துணைத் தலைவர் பொன் கண்ணன், ஊராட்சி செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


சிங்கராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில்  தலைவர் நாகராஜன் கொடியேற்றினார். நரியூத்து ஊராட்சி அலுவலகத்தில்  தலைவர் தங்கப்பாண்டி தலைமை வைத்து கொடியேற்றினார்.பொன்னன் படுகை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பூங்கா காத்தமுத்து கொடியேற்றினார், குமணந்தொழு  ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சீனிவாசன் கொடியேற்றினார்.


மேகமலை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பால்கண்ணன் கொடியேற்றினார். தங்கம்மாள்புரம் ஊராட்சி அலுவலகத்தில் ராமுத்தாய் ராஜா கொடியேற்றினார். ஆத்தங்கரைபட்டி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பழனிச்சாமி கொடியேற்றினார், மந்திச்சுனை- மூலக்கடை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சுப்பிரமணி கொடியேற்றினார்.


முத்தாலம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் அமுதா அய்யணன் கொடியேற்றினர், வருசநாடு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி கொடியேற்றினார். வருசநாடு வனச்சரக அலுவலகத்தில் வன உதவி பாதுகாவலர் சாந்தவர்மன் கொடியேற்றினார். மேகமலை வனச்சரக அலுவலகத்தில் ரேஞ்சர் அஜய் கொடியேற்றினார். 

No comments:

Post a Comment

Post Top Ad