75வது சுதந்திர தின விழா - சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

75வது சுதந்திர தின விழா - சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்.

எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா - சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை  சார்பில்  மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளியில் இந்திய நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள்  முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி  மரியாதை செலுத்தி  சுதந்திர தின விழாவினை  துவக்கி வைத்தார். 


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை  தேனி மாவட்ட தலைவர் எஸ்.மணி, மாவட்டச் செயலாளர்  பி.பாண்டியன்,  மாவட்ட பொருளாளர்  எஸ்.தங்கவேல்  ஆகியோர் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் மாணவ மாணவிகளிடையே ஓவியம் வரைதல், எழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி  உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை சர்வதேச  ஐக்கிய கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.  


மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் அவர்களுக்கு  நினைவு பரிசாக அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தை வழங்கி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில்  ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ்,துணைத் தலைவர் சுசீலா, ஆசிரிய பெருமக்கள், பள்ளி  மாணவ மாணவிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad