பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்ககோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்ககோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே சிறப்பாறை கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.


இந்தப் பள்ளி கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாகவே பழுதடைந்தும் மேற்கூரை சேதம் அடைந்தும் உள்ளது. இதனால் பள்ளி கட்டிடம் எப்போது  இடிந்து விழும் என்ற அச்சத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளனர். பழுதடைந்த பள்ளி கட்டடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென சிறப்பாறை கிராம பொதுமக்கள் மற்றும் கிராம கல்வி வளர்ச்சி குழு சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 


இதனை தொடர்ந்து நேற்று சிறப்பாறை கிராம பொதுமக்கள் மற்றும் கிராம கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், ஏ. பி. டி. திருப்பதி வாசகன் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். விரைவில் பழுதடைந்து கிடக்கும் பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரித்த பின்னரே, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad