பெரியகுளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுமிதா தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 August 2022

பெரியகுளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுமிதா தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுமிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் புனிதன் பொறியாளர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ சண்முகசுந்தரம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.


பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக நகரின் முக்கிய பகுதியான மூன்றாந்தல் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும்,நகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் பொதுமக்கள் குழந்தைகள் முதியவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அவற்றை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடந்த ஆகஸ்ட் 15 இந்திய திருநாட்டின் 75வதுசுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டதையும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மனநிலையில் திடீர் கூட்டத்தை கூட்டிய நகராட்சி நிர்வாகத்தையும் ஆணையாளரையும் கண்டிப்பது எனவும் இதே நிலை நீடித்தால் குடியரசுத் தலைவர் பாரத பிரதமர் தலைமைச் செயலாளர்,கவர்னர் ஆகியோர்களுக்கு புகார் மனு அளிக்கப்படும் எனவும்,இனி வருங்காலங்களில் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.


மேலும் பாதாள சாக்கடை மூடிகள் சாலை வசதிகள் சாக்கடை வசதிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும் எனவும்,வராக நதியில் கழிவுநீர் கலப்பதே தடுக்க வேண்டும் எனவும்,மாரியம்மன் கோவில் சன்னதி வீதியில் போடப்பட்டு வந்த சாலை அமைக்கும் பணி தாமதமாக கிடப்பில் போடப்பட்டதாகவும் உடனடியாக சரிவர பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும்,நகர் பகுதியில் தானியங்கி மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் எனவும் பேசினார்.அதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கி மனு நகர் மன்ற தலைவரிடம் அளிக்கப்பட்டது.


அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் குருசாமி, ராணி, முத்துலட்சுமி, சந்திரா, சத்தியா, கிருஷ்ணவேணி,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad