மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 August 2022

மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கமாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்து பேசினார். 


ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி, ஒன்றிய பொருளாளர் தேன்மொழி, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் அழகுராஜா, மருத்துவத் துறை முத்துப்பாண்டி மற்றும் சங்க ஊழியர்கள் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்குவதற்கு பதிலாக சத்துணவு மையங்களில் சத்துண ஊழியர்கள் மூலம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad