அதிமுகவில் இணைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பெரிய வீரன். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 August 2022

அதிமுகவில் இணைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பெரிய வீரன்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் பெரிய வீரன் இவர் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார், அதிமுகவில் பணியாற்றி வந்த இவர் டிடிவி தினகரன் தலைமையிலான-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தேனி வடக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றி வந்த நிலையில், நேற்று பழனிக்கு வந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துமுன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.அதிமுக நிர்வாகி அமமுகவில் இணைந்ததும் அதனை தொடர்ந்து எடப்பாடி ஆதரவாளராக மாறியதும் ஓபிஎஸ் அணி டிடிவி அணியினரிடையே இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


- தமிழக குரல் செய்திகளுக்காக பெரியகுளம் செய்தியாளர் பால்ஸ்டார் கிங்ஸ்லி.

No comments:

Post a Comment

Post Top Ad