மின் வாரிய மசோதா விவகாரம், மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 August 2022

மின் வாரிய மசோதா விவகாரம், மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்.

மின்சாரவாரிய சட்ட திருத்தமசோதா இன்று  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டிபட்டி துணை மின் நிலையம்  முன்பு தேனி மாவட்ட மின்பகிர்மான அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார்.


ஏ ஐ டி யு சி மாவட்டத் தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரியதொழிலாளர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள் . 


மின்வாரிய திருத்தச் சட்டம் நிறைவேறினால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் ரத்தாகும் என்றும்,   நெசவாளர்களுக்கான மின்சார மானியம் ரத்தாகும் என்றும்,  அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்றும் , மின்வாரிய தொழிலாளர்கள் உரிமைகள் பாதிக்கப்படும் என்றும்  வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad