பூங்காவை அகலப்படுத்துவதற்காக இரு புறங்களிலும் சாலைகளை ஆக்கிரமித்து பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 August 2022

பூங்காவை அகலப்படுத்துவதற்காக இரு புறங்களிலும் சாலைகளை ஆக்கிரமித்து பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சின்ராஜ் பூங்காவை நகராட்சி நிர்வாகம் 51 லட்சம் ரூபாய் செலவில் மறுசீரமைப்பதற்காக கடந்த இரண்டு தினங்களாக பணிகள் மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் பூங்காவை மேலும் அகலப்படுத்துவதற்காக இரு புறங்களிலும் உள்ள சாலைகளை ஆக்கிரமித்து பணிகள் மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி அப்பகுதியில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படும் என்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானதால் இன்று பொதுமக்கள் பூங்கா சீரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இத்தன நாள் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி அதிகாரிகள் நகரும் என்ற உறுப்பினர்கள் பூங்கா பணி திட்டமிட்டவர் நடைபெறும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் முழுமையான பணிகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் பூங்காவிற்கு அருகில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளதாகவும் அதற்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய முறையில் நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad