பெரியகுளத்தில் செட் பவுண்டேஷன் 10ம் ஆண்டு விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 September 2022

பெரியகுளத்தில் செட் பவுண்டேஷன் 10ம் ஆண்டு விழா.

தேனி மாவட்டம், பெரியகுளம் தனியார் திருமண மண்டபத்தில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெரியகுளம் வளர்ச்சி பேரவை தலைவர் மணிகார்த்திக் தலைமை தாங்கினார். செட் பவுண்டேஷன் தலைவர் நித்யானந்தம் வரவேற்புரை ஆற்றினார். 

அறிவுச் சோலை படிப்பகம் முகமது சபி தொடக்க உரையாற்றினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பெரியகுளம் காவல்துணை கண்காணிப்பாளர் கீதா, மருத்துவர் செல்வராஜ், ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் சேசுராணி, நகர மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், அதிமுக நகர்மன்ற  உறுப்பினர் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம்,  நகர் நல சங்க செயலாளர் அன்புக்கரசன், வர்த்தக சங்கத் தலைவர் சிதம்பர சூரிய வேலு, தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் மகாராஜன், பெரியகுளம் வியாபாரிகள் சங்க செயலாளர் விடிஎஸ் ராஜவேலு, மாங்கனி அரிமா சங்க தலைவர் ராமநாதன், காவல் ஆய்வாளர் மீனாட்சி, நூலகர்கள் சவடமுத்து, ராஜகோபால் ஆகியோர்  கலந்து கொண்டு, 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கினர்.


 நிகழ்வின் நிறைவாக, செட் பவுண்டேசன் தலைவர் நித்யானந்தம் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad