தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊர்புற நூலகம் அமைந்துள்ளது. கீழ வடகரை அழகர்சாமிபுரம் மற்றும் பெருமாள்புரம், கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் ,போட்டி தேர்வுக்கு தயாராவோர் என பல தரப்பினருக்கு இந்த நூலகம் வாசிப்பு ஆர்வத்தை தூண்டி வருகிறது.
இந்த நூலகத்தில் இதுவரை 74 பேர் புரவலர்களாக இணைந்து, நூலகத்தின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று கீழவடகரை கிராம நிர்வாக அலுவலர் அகிலன் ரூ.1000 செலுத்தி, நூலகத்தின் 75வது புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார். புரவலராக சேர்ந்த கீழ வடகரை கிராம நிர்வாக அதிகாரி அகிலனுக்கு, வாசகர் வட்ட தலைவர் மோகன், பொருளாளர் ஜெயராஜ், நூலகர் ராஜகோபால், பொறியாளர் இராஜாமணி, ஜெயராமன், மணி பூசாரி ஆகியோர் பொன்னாடை பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment