பெரியகுளத்தில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

பெரியகுளத்தில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா


தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது திருவருவ சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ், பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார்  ஆகியோர் அண்ணாவின்  திருவுருவ சிலைக்கு,  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்வில், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டியன், பெரியகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேலு, பேரூராட்சி தலைவர்கள் தென்கரை நாகராஜ், தாமரைக் குளம் பால்பாண்டி, வடுகபட்டி நடேசன் , ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், பாலசுப்பிரமணியம்,  மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

அதிமுக எடப்பாடி அணி சார்பில் கழக அமைப்புச் செயலாளர் எஸ். டி. கே. ஜக்கையன் தலைமையில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்வில், முருக்கோடை எம். பி. ராமர், பெரிய குளம் ஒன்றிய செயலாளர் அன்னப் பிரகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், நகர பொறுப்பாளர் பழனியப்பன் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: அதிமுக ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் சார்பில் மாவட்டச்  செயலாளர்  சையது கான் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து சேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார், அதிமுக நகர மன்ற குழு தலைவர் சண்முக சுந்தரம்ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


அமமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் அறிஞர் அண்ணாவின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.                   


கீழவடகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு பெருமாள்புரம் கிளை செயலாளர் புல்லட் முருகன் ஏற்பாட்டின் படி, பெரியகுளம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. 


கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், இளங்கோவன், மொக்கை பாண்டி, தவமணி,  ராம்ஜி, பழனியப்பன் மற்றும் திமுக கிளைக் கழக நிர்வாகிகள்   ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad