ஆர்.ராசா இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் புகார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

ஆர்.ராசா இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் புகார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள ஆர்.ராசா இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் புகார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பாக திமுகவின் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் உள்ள ஆ.ராசா இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளத்தில் உள்ள வடகரை, தென்கரை மற்றும் தேவதானப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவரான ராஜபாண்டி தலைமையில் புகார் மனு கொடுத்தனர். நகரத் தலைவர் முத்துப்பாண்டி, கோபி கண்ணன், வழக்கறிஞர் சன்னாசி பாபு, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad