தாமரைகுளம் பேரூரட்சியில் ஆதிக்கம் செலுத்தும் பெண் பிரதிநிதிகளின் கணவர்கள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 September 2022

தாமரைகுளம் பேரூரட்சியில் ஆதிக்கம் செலுத்தும் பெண் பிரதிநிதிகளின் கணவர்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சியில் தலைவராக திமுகவைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரும் துணைத் தலைவராக அதே கட்சியைச் சேர்ந்த மலர் கொடி சேதுராமனும், செயல் அலுவலராக ஆளவந்தான் ஆகியோர்இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் பேரூராட்சியில் வெற்றி பெற்ற பெண்களின் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் உறவினர்கள் மாதாந்திர கூட்டங்கள் ஒப்பந்தங்கள், பேரூராட்சி பணிகளில் அதிக அளவில் தலையிட்டு குறுக்கீடு செய்வதாகவும் அதிகாரிகளை மிரட்டுவதாகவும் புகார் உள்ளது.


சமீபத்தில் நடந்த, உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள், பெண் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்களின் உறவினர்கள் அரசு நிகழ்ச்சிகளில் தலையிட்டால் சாட்டையை சுழற்றி சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறினார்.


பெரியகுளம் நகராட்சி மற்றும் தாமரைக் குளம் பேரூராட்சி ஆகியவற்றில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள், தலையீடு இல்லாமல் அரசு பணி செவ்வனே நடைபெற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad