தேனி மாவட்டம் பெரியகுளம் ஜே.ஆர்.ஆர் நகரில் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் பள்ளி அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த லேப்டாப், கேமரா, மற்றும் பேக் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.
இன்று (23.9.2022) வழக்கம்போல் பள்ளியை திறந்து பார்த்த முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தகவலறிந்த காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் வீரமணி சம்பவ இடத்திற்கு வந்து சம்பவ இடத்தில் கைரேகை பதிவு செய்தார். மேலும் மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் செய்து பின்னர் தெருவில் பல பகுதிகளில் ஓடி வந்தது.
எனவே இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment