தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சாலையில் கிடந்த 10 பவுன் தங்க நகையை எடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதாவிடம்ஒப்படைத்த முதியவர் முத்துப்பாண்டி என்பவருக்கு பெரியகுளம் மாங்கனி அரிமா சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாங்கனி அரிமா சங்க வட்டாரத் தலைவர் ஐயப்பன், பெரியகுளம் தலைவர் பொறியாளர் ராமநாதன், செட் பவுண்டேஷன் நிறுவனர் நித்தியானந்தம், நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் விடிஎஸ் ராஜவேல், அரிமா சங்க பொறுப்பாளர்கள் பாண்டியன், பக்கிர்முகமது ஆகியோர் முத்துப்பாண்டி அவர்களுக்கு சன்மானம், மெடல் வழங்கிபொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment