2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 31 October 2022

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி வேளாளர் திருமண மண்டபத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பெரியகுளம் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சாகுல் ஹமீது  தலைமை தாங்கினார். 

தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார்.  இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் மேற்கொண்டார். இந்த நிகழ்வில், வடக்கு மாவட்ட அவை தலைவர் செல்லப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி,  வடுகபட்டி பேருர் கழக செயலாளர் காசி விஸ்வநாதன், எண்ட புளி ஊராட்சித் தலைவர் சின்னபாண்டி, கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், சில்வார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவம், டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், பாக்கியம் கண்ணன், சரவணன், செல்வி அன்னப்பிரகாஷ், ஈஸ்வரன், மீனவரணி மாவட்ட அமைப்பாளர் குள்ளப் புரம் முருகன், ரஞ்சித், உதயசூரியன், ராம்ஜி, மற்றும் பெரியகுளம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட திமுக நிர்வாகிகள், பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


இந்த கூட்டத்தில், எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும், புதிதாக பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் , வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணியினை செவ்வனே முடித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்த நிகழ்வில், வடுகபட்டி பேரூர் கழக செயலாளர் காசி விஸ்வநாதன் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad