தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி சர்வதேசபள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அனுமதியுடன் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சி மற்றும் கல்விக்குழுமம் இணைந்து நடத்திய வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சி தேனி மாவட்ட அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தேனி மாவட்ட ஆட்சியர் உயர்திரு. K.V.முரளிதரன்.இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார். தேனி மாவட்டத்திலிருந்து பல அரசுப்பள்ளிகள், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் கலந்து கொண்டு தங்களது படைபுகளை காட்சிபடுத்தினர். இவற்றை கோடை பண்பலை நேரடியாக ஒலிபரப்பு செய்தது. மாலையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிமாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment