தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று பழுதடைந்த சோலார் வேலியில் சிக்கி இருப்பதாக வனத்துறையினர் சிறுத்தையை மீட்க சென்ற போது வேலியில் இருந்து தானாக தப்பிய நிலையில் உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரனின் கையைக் கடித்து தாக்கி விட்டு சிறுத்தை அருகே உள்ள வனப் பகுதிக்குள் தப்பி சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்ட உதவி பண காவலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை மீண்டும் பழுதடைந்த சோலார் மின்வேலியில் சிக்கிய நிலையில் நேற்று மாலை உயிரிழந்ததாக கூறி வனத்துறையினர் கால்நடை மருத்துவரைக் கொண்டு அவசர அவசரமாக உயிரிழந்த சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து அந்தப் பகுதியில் உள்ள ஓபிஎஸ் இன் மகன்ஓ.பி.ரவீந்திரநாத்குமாருக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை அதே பகுதியில் உயிரிழப்பு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் வனத்துறை அதிகாரியை காப்பாற்றும் நோக்கில் சிறுத்தையை தாக்கிய போது சிறுத்தை உயிர் இழந்து உள்ளதாக சந்தேகம் எழுந்தது.
பெரியகுளம் பகுதியில் உள்ள வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில்தற்போது வனத்துறையினர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆடு கிடை அமைத்திருக்கும் சவுந்தர பாண்டியன் மகன் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் சிறுத்தையை தாக்கியதில் சிறுத்தை உயிரிழந்ததாக கூறி வனத்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தகவல் அறிந்த தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் சங்க வழக்கறிஞர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இன் மகன் ரவீந்திரநாத் க்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்து புதைக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு அந்தப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மகன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் அவருக்கு சொந்தமான இந்த நிலத்தில் ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் ஆடு கிடைய அமர்த்தி பிழைப்பு நடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து தங்கி பிழைப்பு நடத்தி வரும் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மீது பொய்யான வழக்கை வனத்துறையினர் பதிவு செய்து அப்பாவி ஒருவரை ஆனந்த பிரபு என்ற வன ஊழியர் தலைமையில் பத்திற்கு மேற்பட்ட வன ஊழியர்களை வைத்து தாக்கி பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் ஜனநாயகத்தின் தூண்களான பத்திரிக்கையாளர்களுக்கு கூட இந்த தகவலை முன்னுக்கு பின் முரணாக தெரிவித்து மறைத்துள்ளனர்.
அலெக்ஸ் பாண்டியன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக முதல்வரும் காவல்துறை டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் இது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு சங்கத்தை உறுப்பினர்களை ஒன்றிணைத்து உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு உள்ளதாகவும் தோட்டத்து உரிமையாளர் ஒ பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்பாவி ஒருவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது மனித உரிமை மீறல் எனவே சட்ட ரீதியாக நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment