தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அமைந்துள்ளது. தாமரைக் குளம் பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியில் அரசால் நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களாக 15 நபர்கள் உள்ளதாகவும், இந்நிலையில் தூய்மை பணியாளர்களான வெற்றிச்செல்வன், கோட்டை கருப்பசாமி, ஜானகி, பெருமாள் ஆகிய 4 பேரும் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும் ஒரு சில அதிகாரிகளின் ஆதரவுடன் பணிக்கு வராமலேயே சம்பளம் பெற்று வருவதாகவும் இது குறித்து பல்வேறு முறை பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் வளாகத்தில் இந்த நான்கு தூய்மைப் பணியாளர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட பணியை செய்யாமல் அலுவலகத்தில் கையொப்பம் மட்டும் விட்டுவிட்டு சம்பளத்தை பெற்றுக் கொண்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செயல் அலுவலர் தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.பிரச்சனை குறித்து தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment