பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 October 2022

பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், ஆணை மற்றும் வேண்டுகோளுக்கு இணங்க தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ப. நாகரத்தினம் தலைமையில், நகரச் செயலாளர் ஜோதி முருகன் முன்னிலையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 


இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ, தமிழ் புலிகள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழக தவ்ஹீத் ஜமாத், உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு 500 க்கும் மேற்பட்டோர் தேனி - பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து பெரியகுளம் அம்பேத்கர் சிலை வரை நீண்ட வரிசையில் நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அப்போது "சனாதனத்தை வேரறுப்போம், ஜனநாயகத்தை வென்றெடுப்போம்" தமிழக மண்ணிலே ஆர்எஸ்எஸ்-க்கு இடமில்லை, பெரியார் பிறந்த மண்ணிலே ஆர்எஸ்எஸ்-க்கு இடமில்லை, அம்பேத்கர் வாழ்ந்த மண்ணிலே ஆர்எஸ்எஸ்-க்கு இடமில்லை என பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment

Post Top Ad