பெரியகுளத்தில் திமுகவை கண்டித்துகூட்டணிக் கட்சியான விசிக சார்பில் கண்டன சுவரொட்டி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 October 2022

பெரியகுளத்தில் திமுகவை கண்டித்துகூட்டணிக் கட்சியான விசிக சார்பில் கண்டன சுவரொட்டி.

தேனி மாவட்டம் பெரியகுளம்-தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறுதி பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த சுமிதா சிவக்குமார்தேர்வு செய்யப்பட்டார்.


துணைத் தலைவருக்கான இடத்திற்கு திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 15 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பிரேம்குமார் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் திமுக தலைமையின் அறிவிப்பிற்கு மாறாக திமுகவினர்தங்களது கட்சியை சேர்ந்த ராஜா முகமது என்பவரை துணைத் தலைவராக மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்தனர்.இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகை போராட்டம் சாலை மறியல் கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டனர்.


இது குறித்து திமுக தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே கூட்டணி கட்சியினருக்கு ஆனால் இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இருப்பினும் ராஜா முகமது என்பவர் பதவியை ராஜினாமா செய்யாமல் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு உடன்படாமல் இருந்ததால் துணைத் தலைவருக்கான இடத்திற்கு திமுக விசிகவினருடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படாததால் துணைத் தலைவர் பதவி விவகாரம் கூட்டணி கட்சியில் இழுபறியாகவே இருந்து வந்தது.மேற்படி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜா முகமது என்பவர் தனது மனுவில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்தும் அவரது பதவி காலியானதாகவும் கூறி நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்தனர்.


இது சம்பந்தமாக ராஜா முகமது தரப்பினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தனது பதவியை தகுதி நீக்கம் செய்தது செல்லாது எனவும் தொடர்ந்து பணியாற்றஉத்திரவிட வேண்டும் என கோரி தேனி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையின் போது ராஜா முகமதுவை தகுதி நீக்கம் செய்தது செல்லாது எனவும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.


மீண்டும் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராஜா முகமது மீது எடுத்த நடவடிக்கை செல்லும் எனக்கோரி மேல்முறையீடு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வரின் பணிவான கவனத்திற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகம் கள்ள மவுனம் காப்பது ஏன் எனகோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுக நிர்வாகிகளை கண்டித்து சுவரொட்டிகளை ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad