தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைகுளம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி, பொறி கடலை மற்றும் பூஜை பொருட்களை கொண்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன், வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஜி.கல்லுபட்டி ஊராட்சி அலுவலகத்தில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. ஊராட்சி அலுவலகத்தில் உள்ள உபகரணங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, துணைத்தலைவர் ஆண்டிச்சாமி, உறுப்பினர்கள் , ஊராட்சி செயலர் கோபால் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கீழவடகரை ஊராட்சி அலுவலகத்தில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், துணைத் தலைவர் ராஜசேகர், ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன், வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment