பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 October 2022

பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சி, புதிய கட்டிடம் திறப்பு விழா, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார் .நிகழ்வில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஷ், சேகரன், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல். மூக்கையா, பெரியகுளம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், கீழ வடகரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர் , எண்டப்புளி ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பாண்டியன், எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ், மேல்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, துணைத் தலைவர் மலர் கொடி சேதுராமன், பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் ராதா ராஜேஷ், திமுக பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன்,  ஊராட்சி செயலர்கள் பாண்டியராஜ், ஜெய பாண்டியன், முத்துச்செல்வம், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad