சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 October 2022

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எருமலை நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில்,  முன்னாள் ஜனாதிபதி 91 வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் 91 மரக்கன்றுகள் நடும் விழா, மாணாக்கர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. 


நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்வில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை தேனி மாவட்ட தலைவர் முனைவர் மணி, செயலாளர் முனைவர் பி.பாண்டியன், பொருளாளர்  எஸ்.தங்கவேல், உதவி தலைமை ஆசிரியர் பிரபு, மற்றும் பள்ளி மாணவ மாணவியர், ஆசிரிய, ஆசிரியை பெருமக்கள், எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்கலந்து கொண்டனர்.


ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நிகழ்ச்சில்  மாணவ மாணவியர்களுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment

Post Top Ad