தென்கரை நூலகத்தில் புரவலர்களாக இணையும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 October 2022

தென்கரை நூலகத்தில் புரவலர்களாக இணையும் நிகழ்ச்சி.

தேனி மாவட்டம், தென்கரை கிளை நூலகத்தில் 268வது புரவலராக, அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளரும் வழக்கறிஞருமான தவமணி இணைந்தார். இதே போல்,  269வது புரவலராக, 23வது வார்டு செயலாளர்  முத்துக்குமார் இணைந்தார். 


புரவலர்களாக இணைந்தவர்களுக்கு தென்கரை நூலகர் சவட முத்து, புரவலர் சேர்ப்பிற்கான சான்றிதழ் மற்றும் ரசீது ஆகியவற்றை  வழங்கினார். இந்த நிகழ்வில், எம்ஜிஆர் மன்ற நகர செயலாளரும், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்க செயலாளருமான  வி.டி.எஸ்.ராஜவேல்,  அண்ணா தொழிற்சங்க நகர செயலாளர் கமலக்கண்ணன், கீழ வடகரை ஊர்ப்புற நூலகர் ராஜகோபால்  உள்பட பலர் கலந்து கொண்டனர். புரவலர்களாக இணைந்தவர்களுக்கு நல் நூலகர் சவடமுத்து நன்றி தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad