தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமையில் நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ சண்முகசுந்தரம் பேசியதாவது.
- பெரியகுளம் நகராட்சியில் உள்ள ஒன்று முதல் 30 வார்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அதிமுக நகர் கழக நிர்வாகிகளுக்கும் நகர்மன்ற தலைவர் அவர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் அலுவலகப் பணியாளர் தூய்மை பணியாளர் அனைவருக்கும் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான மாண்புமிகு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சார்பிலும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பிலும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வது எனவும்,
- தேனி பாராளுமன்ற உறுப்பினர் O.P.ரவீந்திரநாத் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் எதிரில் நூலகம் அமைக்கும் பணிக்கான இடத்தை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கி தர வேண்டும் எனவும்,
- பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணிக்காக வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகள் சேதமடைந்து உள்ளதாலும்,பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் கச்சேரி ரோட்டில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் உள்ள சேதமடைந்த பழைய இரும்பு பொருட்களை பொது ஏலத்தில் விட்டு நகராட்சிக்கு வருவாயை ஏற்படுத்த வேண்டும் எனவும்,
- காமராஜர் கடைவீதியில் நடைபெற்று வரும் சாலைப் பணியில் தீவிரப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும்,
- தென்கரை பள்ளிவாசல் தெருவில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், 6)மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சாமான்களையும் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் அங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு சம்பளத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் எனவும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் குருசாமி முத்துலட்சுமி, ராணி, சந்திரா கிருஷ்ணவேணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment