தமிழகசட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து தேனி மாவட்டம் கம்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கழக அமைப்புச் செயலாளர் STK.ஜக்கையன் தலைமையில் கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் முதல்வர், இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏக்களை விடுதலை செய்ய கோரியும், திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்பி பார்த்திபன், முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையநம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மாவட்ட பொருளாளர் சோலைராஜ், தேவாரம் பேரூர் கழக செயலாளர் சீனிவாசன் உட்பட 35 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment