பெரியகுளம் பேருந்து நிலையத்தில் உயர்மின் கோபுர விளக்கை பயன்பாட்டிற்கு எம்.பி. ரவீந்திரநாத் துவக்கி வைத்தார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 October 2022

பெரியகுளம் பேருந்து நிலையத்தில் உயர்மின் கோபுர விளக்கை பயன்பாட்டிற்கு எம்.பி. ரவீந்திரநாத் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் அவர்களின் (2019-2020)ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ஒன்பது லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு அதனை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலைய வெளிப்புறத்தில் புதிதாக அமைய உள்ள நூலகத்திற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சிபொறியாளர் சண்முகவடிவு, அதிமுக நகர்கழக செயலாளர் அப்துல்சமது, நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால்,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்டஅம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் வக்கீல் தவமணி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் முத்து, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், கீழ வடகரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செல்லப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துலட்சுமி, ராணி, சத்யா, கிருஷ்ணவேணி, நிர்வாகிகள் ஆசிக், முகமது, சலீம் காஜாமைதீன், சேகர், முத்துக்குமார், முத்துப்பாண்டி, ராஜேந்திரன், ராஜ், கதிரேசன், நந்தகுமார், ரெங்கராஜ், மகளிர் அணி செல்லம்மாள் உட்படகட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad