தேனி மாவட்டம், பெரியகுளம் நியூ கிரவுண்ட் மைதானத்தில், ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் மற்றும் கோல்பிங் இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில், மைதானத்தில் உள்ள குப்பைகள் அகற்றும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடுவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் தலைமை தாங்கி, தூய்மை பணிகளை துவங்கி வைத்ததுடன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தென்கரைப் பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் ஜேசுராணி, நகர் நலச் சங்க செயலாளர் அன்புக்கரசன், ரோட்டரி கிளப் தலைவர் ஜி .கே. மணி கார்த்திக், நேசம் முருகன், நல் நூலகர் சவடமுத்து, வார்டு கவுன்சிலர் குமரேசன், சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவியர் மற்றும் பேராசிரியைகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment