கூட்டத்தில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறுவது போல் நகர சபை பேரூராட்சி சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்ததின் அடிப்படையில் நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ள நகர சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் தேவைகள் குறித்து பொதுமக்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும் எனவும், வார்டு வாரியாக கூட்டங்களை நடத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அதிமுக நகரமுன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், நகராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை சரிபார்த்து இறந்தவர்கள் வெளிநாடு சென்றவர்கள் வெளியூரில் குடியிருப்பவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கம் செய்து நகர் பகுதிகளில் வசிக்கக்கூடிய வாக்காளர்களை முறையாக கணக்கிட்டு அதன் பிறகு நகரசபை கூட்டம் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் சரிவர நகராட்சி நிர்வாகம் இயங்க வேண்டும் எனவும் பேசினார்.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் குருசாமி, வைகை சரவணன், அப்துல் மஜீத், லட்சுமி, சுதா நாகலிங்கம், நாகபாண்டி, பிரியங்கா, முத்துலட்சுமி, ராணி, சந்திரா,சத்யா, கிருஷ்ணவேணி, மற்றும்நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment