நவம்பர் 1 தமிழக உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் கிராம ஊராட்சிகளில் பகுதி வாரியாக கிராம சபை போன்று கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்ததின் அடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தனித்தனியாக கூட்டங்கள் நடைபெற்றது கூட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர் குழாய் அமைத்தல் சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு மனுவாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன் செயல் அலுவலர் ஆளவந்தான் பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன்,வார்டு உறுப்பினர்கள் வசந்தா,கோமதி முருகன், பாண்டி, ஜாகீர் உசேன், மைதிலி, தேவகி,கவிதா, முத்துலெட்சுமி, முனியம்மாள் சாந்தி,ஆகியோர் தங்களது வார்டு பகுதிகளில் தனித்தனியாக கூட்டங்களை கூட்டி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
No comments:
Post a Comment