காரில் 200 பண்டல் போலி பீடி கடத்தி வந்த இருவர் கைது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 16 November 2022

காரில் 200 பண்டல் போலி பீடி கடத்தி வந்த இருவர் கைது.




பெரியகுளம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திண்டுக்கல்லில் இருந்து காரில் 200 பண்டல் போலி பீடி கடத்தி வந்த திண்டுக்கல் சேர்ந்த மீரா மைதீன் மற்றும் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த காட்டு ராஜா என்ற இரண்டு பேர் கைது 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நான்கு வழிச்சாலையில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது திண்டுக்கல்லில் இருந்து அதி வேகமாக நானோ கார் ஒன்று சாலையில் வருவதைப் பார்த்த காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தியபோது அவசர வேலையாக தேனி சென்று கொண்டிருப்பதாக கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார் ஓட்டுநர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வரும்படி கூறியுள்ளனர்.


அப்போது அவர் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளிக்கவே காரை சோதனை மேற்கொண்ட பொழுது காரில் பண்டல் பண்டலாக போலிப் பீடி இருப்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போலி பீடியை கடத்தி வந்த நபர் யார் என விசாரணை மேற்கொண்ட போது திண்டுக்கல்லை சேர்ந்த மீரா மைதீன் மற்றும் பெரியகுளம் அருகே உள்ள எண்ட புளி ஊரைச் சேர்ந்த காட்டு ராஜா என்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து பெரியகுளம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கடத்தி வந்த பீடி பண்டல்கள் மற்றும் கடச்சலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி விசாரணை மேற்கொண்ட போது போலி பீடி பண்டல்கள் திண்டுக்கல்லில் இருந்து மீரா மைதீன் விற்பனைக்கு கொண்டுவந்ததும்  காட்டு ராஜா என்பவரின் உதவியுடன் பெரிய குளம் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது மேலும் போலி பிடி தயாரிப்பு நிறுவனம் எங்கு உள்ளது யாரெல்லாம் இதன் பின்னணியில் செயல்படுகிறார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad