அடிப்படை வசதிகளில் தொய்வை காணும் நூறாண்டுகள் கடந்த பெரியகுளம் நகராட்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 15 November 2022

அடிப்படை வசதிகளில் தொய்வை காணும் நூறாண்டுகள் கடந்த பெரியகுளம் நகராட்சி.


தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மூத்த நகராட்சியாக பெரியகுளம் நகராட்சி நூறாண்டுகளுக்கு மேலும் பழமை வாய்ந்ததாகும்.பாதாள சாக்கடை, குடிநீர் உட்பட சில வசதிகளை தவிர்த்து பல அடிப்படை வசதிகளில் பெரிய அளவில் பஞ்சம் இருக்கிறது. 

பொது சுகாதாரம், ஆங்காங்கே உள்ள குண்டும் குழியுமான சாலைகள், ஆக்கிரமிப்புகள், வராக நதியில் இரவில் மணல் திருட்டு என சில விஷயங்கள் இன்னும் தொடர்கதையாக தான் இருக்கிறது. தற்போதுள்ள நகராட்சி பல விஷயங்களை செய்து வந்தாலும் கூட அவை போதவில்லை என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது .அதற்கு நிதி பற்றாக்குறையும் ஒரு காரணமாகும்.


நிதி பற்றாக்குறை நிலவுவதற்கு மிகக் குறுகிய பரப்பளவே உள்ள பெரியகுளம் நகராட்சியில் நூறு சதவீதம் வரி வசூல் ஆகாததும் ஒரு காரணம். கடந்த பல வருடங்களாகவே பெரியகுளம் நகராட்சியின் எல்லை விரிவாக்கப்படாமலே இருக்கிறது.அதனால் இரண்டாம் நிலை நகராட்சியாகவே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நகராட்சி எல்லை விரிவடையும்போதுதான் வரி வசூல் அதிகரிக்கும். 


அதற்கு தகுந்த மாதிரி உள் கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கும். தற்போதைய சூழ்நிலையில் பெரியகுளம் நகரிலும் அதை ஒட்டி உள்ள புறநகர் பகுதிகளிலும் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. பெரியகுளம் நகராட்சியின் எல்லை விரிவாக்கப்பட இதுவே தக்க தருணம். நூறாண்டுகள் கடந்த பெரியகுளத்திற்கு அடிப்படை வசதிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள  சிறப்பு கவனம் அளித்து நிதி ஒதுக்குமா தமிழக அரசு? 

No comments:

Post a Comment

Post Top Ad