தமிழகத்தில் கிராமசபை கூட்டம் போல் நகராட்சி பகுதிகளிலும் பகுதி சபா கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அந்தந்த வார்டு மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கான அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
24வது வார்டு பகுதி சபா கூட்டத்திற்கு நகர்மன்ற அதிமுக குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அலுவலர்துரைச்சாமி மேற்பார்வையிட்டார். தெற்கு தெரு காளியம்மன் கோவில் முன்பு 12 மீட்டர் உயரத்தில் தெருவிளக்கு அமைக்கவும், வார்டு முழுவதும் பழைய பாதாள சாக்கடையை அகற்றிவிட்டு பெரிய குழாய்கள் அமைத்து அதன் மூலம் புதிய பாதாள சாக்கடை அமைக்கவும், சந்து பகுதிகளுக்கு கான்கிரீட் சாலை அமைக்கவும், 24வது வார்டில் புதை வடிகால் பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகைக்கு விலக்கு அளிக்க வேண்டும், வார்டு முழுவதும் எல்.இ.டி பல்புகள் அமைந்த தெருவிளக்குகள் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment