தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தென்கரை வள்ளுவர் சிலைக்கு பின்பாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு அரசு மதுபான கடை இயங்கி வந்தது. இந்நிலையில் பல்வேறு கட்சியினர், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இரண்டு அரசு மதுபான கடைகளும் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியகுளத்தின் முக்கிய பகுதியாக உள்ள தென்கரை மூன்றாந்தல் காந்தி சிலை முன்பாகவும், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் தனியார் மதுபான கடை திறக்கப்பட்டது.
இந்த மதுபான கடையானது பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் செல்லும் முக்கிய பகுதியில் உள்ளதால் மது பிரியர்களால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பெரியகுளம் பகுதியில் உள்ள மூன்று தனியார் மதுபான கடையை அடைக்க கூறி பெரியகுளம் பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் முத்தையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடையை அடைக்க கோரி கண்டன கோசங்கள் எழுப்பினர். மேலும்லும் கடையை அடைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டமான பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment