தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சிக்குட்பட்ட ஆடு பாலம் அருகில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும், பழைய பேருந்து நிலையம் சித்தா காம்ப்ளக்ஸில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார்,திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ்,நகராட்சி ஆணையாளர் புனிதன், பொறியாளர் சண்முகவடிவு, சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, சேகர், நகர்மன்ற உறுப்பினர்கள், பவானிமுருகன், அப்துல் மஜீத், சத்தியா, பால்பாண்டி, வெங்கடேசன், கிஷோர்பானுநூர் முகமது, வெங்கிடுசாமி,திமுக நகர துணை செயலாளர் சேதுராமன் மற்றும் வார்டு செயலாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment