ஹைவேவிஸ் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மேகமலை வனச்சரகத்தில் உள்ள சுமார் ஏழு தேயிலைத் தோட்ட எஸ்டேட்டுகள் இருக்கிறது. இந்த எஸ்டேட்டுகளில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்டேட் குடியிருப்புகளில், சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேகமலை வனச்சரகத்தில் பணியாற்றுகிற காமராஜ், மாயாண்டி உள்ளிட்டோர் மது போதையில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றக்கூடிய பெண்களிடம் அத்துமீறி உன் போன் நம்பரை கொடு உன்னிடம் அவ்வப்போது பேசிக் கொள்கிறேன் என்றும் அதேபோல் எஸ்டேட் குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் நீங்கள் மரங்கள் வெட்டியதாக, கஞ்சா கடத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன் என்று மிரட்டி வலுக்கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபாய் 3000 வீதம் சுமார் 2 லட்ச ரூபாய் வரை வசூல் செய்து இருக்கின்றனர். தீபாவளி தினத்தன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50ரூபாய் முதல் 200ரூபாய் வரை தீபாவளி கட்டாய வசூல் வேட்டையாடியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் கல்லூரி மாணவரை கடுமையாக தாக்கி, சுமார் இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல் போனை அடித்து பிடுங்கி உடைத்து எறிந்து விட்டுள்ளனர். எனவே வனத்துறையில் பணியாற்றும் காமராஜ் மற்றும் மாயாண்டி ஆகியோர் தொடர்ந்து சட்டவிரோதமாக பல்வேறு வகையான பிரச்சினைகளை செய்து அங்கு வாழும் மக்களை அச்சுறுத்தி, மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் இவர்கள் மீது துறை ரீதியாக உரிய விசாரணை செய்து துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலாளர்.
சரவணபுதியவன் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தமிழ் பெருமாள் மாவட்டத் துணைத் தலைவர்வீரையா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் ஆனந்த் மாவட்டக்குழு உறுப்பினர் விக்கி, .சதீஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வனத்துறையினரின் அடாவடித்தன நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment