தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை சாலையில் தீர்த்த தொட்டி உள்ளது.இந்தத் தீர்த்த தொட்டியில் திருவிழா காலங்கள் மற்றும் விசேஷ நாட்களில் தீர்த்தம் எடுப்பது நீராடுவது போன்ற பல்வேறு காரியங்களை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தீர்த்த தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை குளங்கள் தேங்கி கிடந்தன.பெரியகுளம் மாங்கனி அரிமா சங்கத்தின் சார்பில் இன்று தீர்த்த தொட்டி பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
பெரியகுளம் மாங்கனி அரிமா சங்க தலைவர் பொறியாளர் ராமநாதன், வட்டாரத் தலைவர் ஐயப்பன், அதிமுக நகர மன்ற குழு தலைவருமான அரிமா.ஓ.சண்முக சுந்தரம்,அரிமா குபேந்திரன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment