பெரியகுளம் அருகே தாமரைகுளத்தில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை தென்கரை காவல்துறையினர் விசாரணை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 17 November 2022

பெரியகுளம் அருகே தாமரைகுளத்தில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை தென்கரை காவல்துறையினர் விசாரணை.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  தாமரைக்குளம் தண்ணீர் தொட்டி தெருவில் வசித்து வருபவர்  முத்துக்குமார் மனைவி உமா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டை கடந்த ஒரு வருடமாக  ஒத்திக்கு வாங்கி குடியிருந்து வந்த நிலையில் உமா கடந்த ஒரு சில மாதமாக திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் தீபாவளிக்கு பெரியகுளம் அருகே  உள்ள அவரது வீட்டிற்கு வந்து விட்டு திருப்பூருக்கு மீண்டும் சென்ற நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த பொருள்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது


இந்நிலையில் இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து தென்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த தென்கரை  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் வீட்டில் உள்ள இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் எடுத்துச் சென்றதாக காவல்துறையினர் முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் உரிமையாளர் உமா வெளியூரில் இருப்பதால் நேரில் வந்த பின்பே வீட்டில் உள்ளிருந்து என்னென்ன பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்


மேலும் தென்கரை காவல்துறையினர் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நகை பணம் கொள்ளை அடிக்கபட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad